முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில், வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகும் முடிவை மங்கள அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அவர் இன்று கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை போட்டியிடுவதைத் தவிர்த்துகொண்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்ட வேட்பாளர்களைத் தனது விருப்பு இலக்கத்துக்கு வாக்களிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.