இன்றுமுதல் மக்கள் மத வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இஸ்லாமிய பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொள்ள மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கத்தோலிக்க திருச்சபைகளில் வழிபாடுகளை நடத்துவது குறித்த முக்கியமான பேச்சுவார்த்தை பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று கொழும்பு ஆயர் இல்லத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.