ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு டோனியை தொடர்ந்து மற்றொரு நபரையும் அந்தணி வீரரான டேவைன் பிராவோ கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் அடங்கியிருக்கும் கிரிக்கெட் பிரபலங்கள், கடந்த காலங்களில் தங்களால் மறக்க முடியாத பல அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், மேற்கிந்திய தீவு அணியின் முன்னணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான டேவைன் பிராவோ CSK குறித்து கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் அனைத்து பெரிய வெற்றிகளுக்கும் காரணம் கேப்டன் டோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங்கையே சேரும்.
அந்த அணியின் உரிமையாளர்களும் இவர்கள் இருவரையுமே முழுவதுமாக நம்புகிறார்கள். CSK அணி வீரர்களும் டோனி மீது அவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்கள்.
CSK அணியின் சூழலே மிக அழகானது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டோனி மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எங்கள் அணியிலும் அவர் அப்படித்தான் அவருடன் மிக சுலபமாக உங்களால் பேசமுடியும்.
கிரிக்கெட் களத்திற்கு வெளியே வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் மிக இயல்பான வீரராக டோனி இருப்பார்.
அவரின் அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்களை பற்றி யோசித்துப் பாருங்கள், ஆனால் டோனி தான் அவர்கள் எல்லோரையும் விட மிக தன்னடக்கம் உடையவர். CSK ஒரு ஸ்பெஷலான அணி, டோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங்கே CSK பெரும் பெரிய வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.