கிளிநொச்சியில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்டிருந்த மோதலினால் தனக்கு தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கு பகுதியை சேர்ந்த (வயது 28) இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் வசித்த குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் அண்மைக்காலமாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 5 ஆம் திகதி குறித்த குடும்பப் பெண் கணவனின் சித்திரவதையை தாங்காது தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து தீக்காயத்திற்குள்ளான பெண்ணை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ள நிலையில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பெண்ணின் இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.