லண்டனில் கருப்பினத்தவரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், பொலிசாருக்காக வைக்கப்பட்டிருந்த நினைவு சின்னத்தில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியதால், இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 28 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கருப்பினத்தவரான George Floyd என்பவர் Minnesota-வில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இருப்பினும் கருப்பினத்தவர் என்றால் அவ்வளவு சாதரணமா? எங்களுக்கும் வலி உண்டு, உங்கள் நிற வெறி, இன்வெறியை காட்டாதீர்கள், நீதி வேண்டும் என்று கூறி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற பல்வேறு நாடுகளில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் நேற்று கருப்பின நபர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
Absolute shame on this man.
Of all the images to emerge over these few testing days I find this one of most abhorrent.
Please help identify him. pic.twitter.com/8ydcNmTWrN
— Tobias Ellwood MP (@Tobias_Ellwood) June 13, 2020
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை லண்டனில் நடந்த போராட்டங்களின் போது, வெஸ்மின்ஸ்டரில் இருக்கும் உயிரிழந்த(பொலிஸ் அதிகாரி) Keith Palmer-ன் நினைவிடத்திற்கு அருகில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படத்தை Tobias Ellwood தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இது வெட்கப்பட வேண்டியது, இந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க உதவுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, Keith Palmer(பொலிசார்) கொல்லப்பட்டார், இதனால் அவருக்காக கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நினைவு சின்னம் ஒன்று வைக்கப்பட்டது. அவரின் மரணத்திற்காக ஜார்ஜ் பதக்கமும் வழங்கப்பட்டது.
இப்படி நாட்டிற்காக உயிரிழந்த பொலிசாரின் நினைவிடத்திற்கு அருகே குறித்த இளைஞர் சிறுநீர் கழித்தால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இது தொடர்பாக 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொது ஒழுக்கத்தை மீறியதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.