லண்டனில் யூத மத குரு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கிடந்த சம்பவத்தில், ஒருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Stoke Newington வீதியில், யூத மத குருவான Yaacov Schlesinger என்ற நபர் அடையாளம் தெரியாத நபரால் பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார்.
அப்போது இந்த சம்பவத்திற்கு காரணமான நபரை, அங்கிருந்த இரண்டு கட்டுமான தொழிலாளர்கள் மடக்கிப் பிடித்ததாக செய்தி வெளியானது.
இந்நிலையில், இந்த கத்தி குத்தி சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி, ஒருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தின் போது ஹீரோவாக செயல்பட்டு, அந்த நபரை பிடித்த கடுமான தள மேலாளர் Lazar Friedlander கூறுகையில், திடீரென்று ஒரு அலறல் சத்தம் கேட்டது. இதனால் நானும், என் சகோதரரும் அலறல் சத்தம் வரும் இடத்தை நோக்கி ஓடினோம்.
அப்போது யூத மத குரு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இரத்தக்காயங்களுடன் கிடந்ததைக் கண்டோம். அதன் பின் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபரை அங்கிருக்கும் மக்கள் பிடிக்க முயற்சித்து கொண்டிருந்த போது, அவன் தப்ப முயன்றான்.
உடனடியாக நானும் என் சகோதரனும் அவனை பிடித்து, கட்டாயப்படுத்தி கீழே தள்ளி பொலிசார் வரும் அவனின் கையை முதுகின் பின்னால் வைத்து பிடித்துக் கொண்டிருந்தோம். பொலிசார் அந்த நபரை பிடித்துவிட்டு, கத்தியால் குத்தப்பட்டு கிடந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.
பொலிசார் பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை, மதம் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பினாலும், இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.