ஜெர்மனில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரை மீளவும் நாட்டுக்கு அழைக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தங்களின் பாதுகாப்பு படையினருக்காக ஐரோப்பிய நாடுகள் அதிக நிதியை ஒதுக்க வேண்டுமென டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.
நேட்டோவிற்கான கொடுப்பனவு தொடர்பில் ஜெர்மனி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜெர்மனில் நிலைகொண்டுள்ள 9,500 அமெரிக்க படையினர் மீள நாட்டுக்கு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.