சிறுவர்களை இளம்பௌத்த துறவிகளாக மாற்றும் முயற்சிக்கு முன்னாள் நிதியமை்சர் மங்கள சமரவீர தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவிலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஆண் பெண் குழந்தைகள் இளம் பிக்குகளாக மாற்றப்படுவது அதிர்ச்சியளிக்கின்ற விடயம் என குறிப்பிட்டுள்ள மங்களசமரவீர இது விடுதலைப்புலிகளின் சிறுவர்போராளிகள் ,தலிபானின் சிறுவர் திருமணங்களை போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ளார்.
இது சிறுவர் உரிமை மோசமாக மீறப்படும் செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த படமொன்றையும் அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.
Young girls and boys ordained as bikkhus is as shocking and unacceptable as tiger child soldiers and taliban child brides. A scandalous violation of the rights of a child. https://t.co/ZIabQgXBjN
— Mangala Samaraweera (@MangalaLK) June 16, 2020