கொரோனா வைரஸ் மீண்டும் பர ஆரம்பித்ததை தொடர்ந்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடப்படுகிறன்றன.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவுகளின்படி, மிகக் கடுமையான கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினரின் உயிரைக் காப்பாற்ற ஸ்டீரொய்ட் டெக்ஸாமெதாசோன் பயனளிக்கும் என்பதுகண்டறியப்பட்டுள்ளது.
உலகில் இதுவரை 8,256,257 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். 445,937 பேர் உயிரிழந்துள்ளனர். 4,306,089 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியா
நேற்று இந்தியாவில் கொரொனா தொற்றினால் 2006 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 11,921 ஆக உயர்ந்துள்ளது. 11,135 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகியுள்ளனர். 354,161 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவிற்கு ஏற்பட்ட அதிகபட்ச உயரிழப்பு இது.
பிரேஸில்
நேற்று 1,33 பேர் உயிரிழந்தனர். இதுவரை 45,456 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 37,278 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதுவரை 928,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா
நேற்று 849 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 119,132 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 25,450 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 2,208,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நிறவெறிக்கெதிரான போராட்டங்கள் நடந்த முக்கிய நகரங்களான அலபமா, தென் கரோலினாவில் கொரோனா தொற்றாளர்கள் இரு மடங்களாக அதிகரித்துள்ளனர்.
சீனா
நேற்று சீனாவில் 40 புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன. தலைநகர் பெய்ஜிங்கில் தொற்று அதிகரித்து செல்வதை தொடர்ந்து, இன்று புதன்கிழமை முதல் பெய்ஜிங்கில் சகல பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புக்களும் ஒன்லைன் மூலமே நடக்கும்.