எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தவறான நிர்வாகம் காரணமாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் லீசிங் கம்பனிகள் வாகங்களை கடத்துகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை அவர்கள் மதிக்கவில்லை.
அரசாங்கம் மாபியாக்களுக்கு அடிப்பணித்துள்ளது. டின் மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அறிவித்த கட்டுப்பாட்டு விலைக்கு என்ன ஆனது?
இதனிடையே தற்போதைய அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐயாயிரம் என்ற விலையை தீர்மானித்துள்ளது.
எனினும், ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் எமது ஆட்சியின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.