தற்போது உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இவற்றின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் இதில் தனிநபர் தரவுகளிற்கு பாதுகாப்பு தன்மை இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து நோர்வேயில் குறித்த அப்பிளிக்கேஷனானது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நோர்வேயில் வாரத்திற்கு 20 தொடக்கம் 50 வரையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்களே கண்டறியப்படுகின்றனர்.
எனவே தகவல் திரட்டும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட குறித்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தவேண்டிய தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.