ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்காக சீன ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கும் சீனாவின் பதில் தூதுவர் ஹூவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து, சீன அதிபர் ஷீ ஜிங் பிங் அவர்கள் அனுப்பி வைத்த கடிதம் மற்றும் வாழ்த்துச் செய்தி ஆகியவற்றை பதில் தூதுவர் ஜனாதிபதியிடம் வழங்கினார்.
கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிராக ஸ்ரீலங்கா முன்னெடுக்கும் விசேட வேலைத்திட்டங்கள் சீன ஜனாதிபதியின் பாராட்டை பெற்றுள்ளதென சீன தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.
இதேவேளை ஸ்ரீலங்காவில் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்யும் வகையில் சீன அரசு மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
அவை சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், நிவாரண உதவிகள் அடங்கிய பட்டியல் பதிற் தூதுவரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.