ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியமான சஹ்ரானின் இரண்டு செல்போன்களில் இருந்த விபரங்கள் அமெரிக்காவில் வைத்து எப்படி காணாமல் போனது என்பது குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியை பெறாமல் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பிரதானி, இந்த இரண்டு செல்போன்களை அமெரிக்க பொலிஸாரிடம் வழங்கியிருந்தார்.
இந்த இரண்டு செல்போன்களிலும் எதுவும் இல்லை என அமெரிக்காவின் எப்.பி.ஐ. பொலிஸார் கூறியிருந்தனர். எனினும் அந்த செல்போன்களில் இருந்த விபரங்கள் திடீரென மாயமானது சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயம் என அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் சிலர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை மறைக்க முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நடத்திய விசாரணைகள் தொடர்பான தகவல்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு அமெரிக்க பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.