இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது இருநாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவு, எதிர்காலத் திட்டங்கள் எனப் பலதும் பேசப்பட்டுள்ளன.
குறிப்பாக கொரோனா தொற்றை இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை இந்தியத் தூதவர் பாராட்டியிருப்பதோடு எதிர்காலத்தில் தேவையான உதவிகளையும் செய்யத்தயார் என்பதையும் பிரதமரிடம் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.