அனைத்து வீடுகளிலும் இப்பொழுது டைனிங் டேபிள் வர தொடங்கிவிட்டது. பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவ தொடங்கிவிட்டன.
இது மட்டுமின்றி இப்பொது திருமணங்களிலும் பஃபே(buffet) விருந்து என்று நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் உண்டாகிவிட்டது.
இந்த நாகரிக வளர்ச்சியால் நாம் இழந்தது நமது கலாச்சாரத்தை மட்டுமல்ல விலைமதிப்பற்ற நமது ஆரோக்யத்தையும்தான்.
இந்த பதிவில் நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்
பெரும்பாலானோர் வீட்டில் அல்லது வெளி இடங்களில் நின்று கொண்டே சாப்பிட்டு பழகியிருப்பார்கள். ஆனால் சாப்பிடும் போது நாம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
- சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிட்ட உடனேயோ நிறைய தண்ணீர் குடிக்க கூடாது.
- சாப்பிடும்போது பழங்களை உட்கொள்ளவும் கூடாது.
- நின்று கொண்டே சாப்பிடவே கூடாது. ஏனெனில் நின்றுகொண்டு சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் நாவின் சுவை அரும்புகள் பாதிக்கும்.
நாம் சாப்பிடும்போது, நேராக அமர்ந்து சாப்பிட வேண்டியது அவசியம். அப்போதுதான் உணவின் ருசி அதிகமாக இருக்கும். நம் உடலில் உணவின் மணம் மற்றும் ருசியை கடத்த வெஸ்டிபுலார் சென்ஸ் மிகவும் அவசியம்.
நின்று கொண்டு சாப்பிடும்போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் கீழ் நோக்கியே பாய்கின்றது. இதன் விளைவாக, உடலில் இரத்தத்தை மேல் நோக்கியும் பாய செய்வதற்காக, இதயம் பெரும்பாடுபடும்.
மேலும் இது ஹைப்போதலாமிக் பிட்யூட்ரி அட்ரினலை தூண்டி மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. கார்டிசால் ஹார்மோனை சுரக்க செய்கின்றது.
இந்நிலை தொடர்ந்தால் உடலில் ருசியை அறியக்கூடிய மற்றும் உணர்வுகளை கடத்தக்கூடிய பகுதிகள் பாதிக்கப்படும்.
இதனால் மன அழுத்தமும் ஏற்படும். அதனால், எப்போதும் சம்மணமிட்டு சாப்பிட வேண்டும்.