கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 71 கடற்படையினர் இன்று (19) வெளியேறியுள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமுக்கு வெளிசர கடற்படை முகாமில் இருந்து கடந்த 20.05.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்காக கடற்படையினர் 167 பேர் அழைத்துவரப்பட்டனர்.
தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்ட கடற்படையினருக்கு பிசிஆர் (PCR) பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் கடந்த 06.06.2020 அன்று 70 பேர் தனிமைப்படுத்தல் நிறைவுசெய்து வெளியேறியுள்ளார்கள்.
எஞ்சியுள்ள 97 கடற்படையினரின் PCR பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான பரிசோதனை முடிவுகளில் 71 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என 19.06.2020 இன்று முடிவுகள் கிடைக்க பெற்றதனை தொடர்ந்து 71 பேரும் தனிமைப்படுத்தழல நிறைவு செய்து வெளியேறி உள்ளார்கள்.
எஞ்சியுள்ள 26 கடற்படையினரின் PCR பரிசோதனைக்களில் மாதிரிகளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உள்ளவர்களுடன் நெருங்கி பழகிய 22 பேருக்கு PCR பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் கிடைத்த பின்னர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறவுள்ளனர். என இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குறூப் கப்டன் றொகான் பத்திரண தெரிவித்துள்ளார்.