இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பேஸ்புக்கில் விளம்பரங்களை வெளியிட செலவிட்டுள்ள தொகை தொடர்பான தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலில் நேரத்தில் விளம்பரங்களின் வெளிப்படைத்தமையை அதிகரிக்கும் ஒரு அங்கமாக செலவிடப்பட்டுள்ள தொகை மற்றும் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியிப்பட்டுள்ளன.
மொத்தமாக ஆயிரத்து 442 விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றுக்காக 15 ஆயிரத்து 288 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய இந்த தொகை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
- வீரோன் குணரத்ன 2 ஆயிரத்து 65 டொலர்களை செலவிட்டுள்ளார்.
- அங்கஜன் ராமநாதன் 657 டொலர்களை செலவிட்டுள்ளார்.
- சஜித் பிரேமதாச 650 டொலர்களை செலவிட்டுள்ளார்.
- விமல் வீரவங்ச 617 டொலர்களை செலவிட்டுள்ளார்.
- விஜயதாச ராஜபக்ச 552 டொலர்களை செலவிட்டுள்ளார்.
- ஹர்ச டி சில்வா 522 டொலர்களை செலவிட்டுள்ளார்.
- அஜித் மன்னப்பெரும 297 டொலர்களை செலவிட்டுள்ளார்.
- மகிந்தானந்த அளுத்கமகே 279 டொலர்களை செலவிட்டுள்ளார்.
மொத்தமாக 10 பேர் இந்த விளம்பரங்களுக்காக செலவிட்டுள்ள தொகை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.