கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் குறித்த நபருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடியைச் சேர்ந்த கமல்ராஜ் (வயது 21) என்பவர் கல்முனை உள்ள தேசிய புலனாய்வுச் சேவையின் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் பணியாற்றியிருந்த நிலையில் நேற்று சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவர் காதல் பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை அவரின் உயிரிழப்பு தொடர்பான சந்தேகத்தை மேலும் வலுவடைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















