இலங்கை உட்பட தமிழகத்தில் நாளை தென்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் காண வேண்டாம் என கொடைக்கானல் வான் இயற்பியல் தலைமை ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் கேட்டுகொண்டுள்ளார்.
இந்த அரிய வகை நெருப்பு வளைய சூரிய கிரகணம் ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் 90 விழுக்காடு தென்படும் எனவும், தமிழகத்தில் பகுதி நேர சூரிய கிரகணமாக 30 விழுக்காடு மட்டுமே தெரியும் எனவும் தெரிவித்தார்.
கொடைக்கானல் மலை பகுதியில் காலை 10.30 மணிக்குத் துவங்கி மதியம் 2 மணிக்கு கிரகணம் முடிவடையும் என்று கூறிய அவர், பிரத்யேக கண்ணாடி உபயோகித்தோ அல்லது கருப்பு கண்ணாடி பயன்படுத்தியோ சூரியகிரகணத்தை கண்டு ரசிக்கிலாம் என்றார்.
கடந்த ஆண்டு சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண ஆராய்ச்சி மையம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக இந்த ஆண்டு தடை செய்யப்பட்டுள்ளது.