ரஷ்யாவில் கொரோனா தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது.
அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு 8 ஆயிரத்து 2பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,889பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 161பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 576,952ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 234,358பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 334,592பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ள போதும், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளமை குறிபிடத்தக்கது.