2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று இடம்பெற உள்ளது.
அதேநேரம் மாயன் கலண்டரின் படி இன்றுதான் இப்புவி உலகின் இறுதி நாள் என்றும் கூறப்படுகின்றது.
மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி இன்றுடன் நிறைவடைவதால், இன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் வெளியாகி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இதேவேளை டிசம்பரில் இடம்பெற்ற சூரிய கிரகணத்தால் உருவாகிய கொரோனா இந்த சூரிய கிரகணத்துடன் முடிவுக்கு வரும் என்றும் பிரபல ஜோதிடர் கூறியுள்ளார்.
ஆகவே இன்று என்ன நடக்கப்போகின்றது? உலகம் அழியுமா அல்லது கொரோனா அழியுமா? அல்லது புதிதாக ஏதேனும் பிரச்சினைகள் தோன்றுமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த கேள்விகளுக்கு மத்தியில் இன்றைய நாள் ஆரம்பமாகி உள்ளது.
அந் வகையில் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை ஸ்ரீலங்கா மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று காலை 10.24 மணி முதல் அவதானிக்க முடியும்.
இன்று காலை 11.51 அளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என்பதுடன் காலை 11.45 அளவில் யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.
இந்நிலையில் வெற்றுக்கண்களால் கிரகணத்தை அவதானிக்க வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.