யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். நேற்று (20) மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இராணுவத்தின் துப்பாக்கியை பறிக்க முயன்றபோதே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மணல் ஏற்ற வந்தவர்கள் ஐந்து பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும், ஒருவர் இராணுவச் சிப்பாயை தாக்க முயன்று. அவரது துப்பாக்கியை பறிக்க முயன்றபோது, சக இராணுவ சிப்பாயினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.