மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இருவரையும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருமாக மூவரை இன்று காலை கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின் போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இருவரும் சகோதரர்கள் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குற்றச்செயல்களுடன் தேடப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரையும் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.