கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 22 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 லிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது.
ஆயிரத்து 980 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 392 ஆக குறைவடைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிந்த வெலிசறை கடற்படை முகாம், இரண்டு மாதங்களின் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார, வெலிசறை முகாமில் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்த 786 கடற்படை உறுப்பினர்கள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
112 கடற்படை உறுப்பினர்கள் மாத்திரமே சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



















