நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தலைமை தாங்கும் கட்சிக்கு பாராளுமன்ற பலத்தை வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒரு பக்கமும் பாராளுமன்றம் இன்னுமொரு பக்கமும் இருந்தால் நாட்டினுள் எவ்வித அபிவிருத்தியையும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


















