நிலவை பிடிக்கும் பனிப்போரில் ரஷ்யாவை முறியடிக்க விண்வெளியில் அமெரிக்கா அணுஆயுதத்தை வெடிக்க வைக்க திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
1957ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் பூமியிலிருந்து முதலாவது விண்கலமான ‘ஸ்புட்னிக்-1’ யை விண்வெளிக்கு ஏவியது.
அதைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியம் ‘ஸ்புட்னிக்-2’ விண்கலத்தில் ‘லைகா’ என்ற நாயை அனுப்பி, விண்வெளியை வெற்றிகொள்வதில் புதிய சாதனையை நிகழ்த்தியது.
நிலவுப் பயணம் முதன் முதலில் ரஷ்யாவின் ‘லூனா2’ என்ற கலம், நிலவில் 1959ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி இறங்கியதில் இருந்து தொடங்குகிறது.
இந்த விண்வெளிப் போட்டியின் புதிய காலகட்டம், 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நிகழ்ந்தது. 1961ஆம் ஆண்டு ரஷ்யாவை சார்ந்த யூரி கெகாரின் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்றார். உலகமே வியந்தது.
ரஷ்ய விண்வெளி வீரர் யூரி கெகாரின் வோஸ்டாக் I விண்கலத்தில் உயரே பறந்து உலகைச் சுற்றிவந்து 108 நிமிடங்கள் பாதுகாப்புடன் பயணம் செய்து பூமிக்கு மிண்டும் திரும்பினார்.
அன்று முதல் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே விண்வெளி சாகதத்தில் ஒரு பனிப்போர் நீடித்து வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான விண்வெளி பனிப்போரில் அமெரிக்க போட்ட திட்டங்கள் குறித்து ஆராய்ச்சியாளரும் , எழுத்தாளருமான கிரீன்-வால்ட் சீக்ரெட்ஸ் ஃப்ரம் தி பிளாக் வால்ட் என ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 20 இலட்சங்களுக்கும் அதிகமான அரசு ஆவணங்களை தொகுத்து எழுதி உள்ளார்.
இந்த 20 இலட்சத்திற்கு அதிகமான ஆவணங்களை கொண்டு அவர் ஆன்லைன் புதையல் என்ற பக்கத்தை 1996 முதல் ஜான் கிரீன்-வால்ட் நிர்வகித்து வருகிறார்.



















