கருணா அம்மான் தெரிவித்த கருத்திற்கு கண்டனம் தெரிவிப்பவர்கள், விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் மற்றும் பணம் கொடுத்தது யார் என்பதை பற்றி பேச மறுக்கிறார்கள். கருணாவின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்க அறிவார்கள். சிங்கள மக்களிற்கும், சிங்கள இராணுவத்திற்கும் எதிராக போரிட ஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகள், பழைய வரலாறு தெரியாததை போல பேசுவது கவலைக்குரியது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
நேற்று குளியாப்பிட்டிய பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
ராஜபக்சவினருக்கு சாப்பாடு கொடுத்தமைக்காக சிறையிலடைக்கப்பட்ட யுகமொன்றிருந்தது. 2015ஆம் ஆண்டின் பின்னர் சில அரசியல்வாதிகள் இவ்வாறுதான் கீழ்த்தரமாக நடந்த கொண்டனர்.
அரசியல்வாதிகள் சமூகம் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும். உண்மையான அரசியல்வாதிகளிற்கு எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும்.
ஐ.தே.க இரண்டாக பிளவடைந்துள்ளதை பார்க்கும்போது, அதை மீண்டும் திருத்தியமைக்க முடியாது போலவே தென்படுகிறது. சஜித் இருக்கும் வரை அதை ஒரு போதும் செய்ய முடியாது என்றார்.



















