அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகளுக்காக மீண்டும் நகரங்கள் திறக்கப்படுவதையடுத்து கொரோனா பரவல் மீண்டும் ஒரே நாளில் உச்சம் தொட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் ஒரே நாளில் 36,400 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டது, அதற்குச் சற்றுக் குறைவாக புதனன்று 34,700 புதித கரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட பகுதிகளான நியூயார்க், நியூஜெர்சியில் சீராக புதிய தொற்றுக்கள் எண்ணிக்கை குறைந்தாலும், அரிசோனா, கலிபோர்னியா, மிசிசிபி, நெவாடா, டெக்சாஸ் ஆகிய நகரங்களில் சீராக புதிதாக தொற்றுக்கள் அதிகமாகியுள்ளன.
இதில் சில நகரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வட கரோலினா, தென் கரோலினா.
புளோரிடாவில் மட்டும் ஒரேநாளில் 5,500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 1ம் திகதி ஊரடங்கை முற்றிலும் அகற்றிய டெக்ஸாசில் கொரோனா நோயாளிகளின் மருத்துவமனைச் சேர்க்கை இரட்டிப்பாகியுள்ளது. புதிய கொரோன தொற்றுக்கள் 2 வாரங்களில் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
ஹூஸ்டனில் 8 மெத்தடிஸ்ட் மருத்துவமனைகலில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது,
மருத்துவமனை மேர்கொண்ட சோதனைகளில் 20% தொற்று உறுதி என்று வருகிறது. இது ஊரடங்கு காலக்கட்டத்தில் 2%, 4% ஆக மட்டுமே இருந்தது.
மக்கள் அனைவரும் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், மக்கள் கூடுமிடங்களைப் பார்த்தால் சமூக இடைவெளி, முகக்கவச கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடுகின்றனர், இதைப் பார்க்கும் போது கடும் கோபம் வருகிறது என்கிறார் டாக்டர் பூம்.
டாக்டர் ஜோசப் ஜெரால்ட் கூறும்போது, அரிசோனாவில் அடுத்த வாரங்களில் மருத்துவமனை படுக்கை வசதிகள் போதாது என்ற நிலை ஏற்படப்போகிறது.
நாங்கள் பெரிய பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம். புதிய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் ஆனால் கவர்னர் டக் டியூஸி மறுத்துவருகிறார், என்றார்.
நியூயார்க், கனெக்டிகட் , நியூஜெர்சிக்கு வருபவர்கள் தங்களைத் தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். என்று உத்தரவிடப்பட்டுள்ளது.