ஈரானிய நடிகையும், ஆஸ்கார்பட நட்சத்திரமுமான தரனே அலிதூஸ்டி, அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் செய்ததற்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான The Salesman என்ற திரைப்படத்தில் ஈரானிய நடிகையான Taraneh Alidoosti நடித்திருந்தார்.
இப்படத்திற்கு 2017-ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது(சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்) வழங்கப்பட்டது.
இதனால் மிகவும் பிரபலமான Taraneh Alidoosti, ஈரானில் தெரு ஒன்றில் ஹிஜாப் அணியாததற்காக ஒரு பெண்ணைத் பொலிசார் தாக்கும் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தாக கூறப்படுகிறது.
இது அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அவர் உடனடியாக சிறையில அடைக்கப்படுவாரா? என்பது குறித்து தெரியவில்லை.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Taraneh Alidoosti சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் திகதி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தண்டனை விவரம் வெளியாகியுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட ஈரான் சர்வதேச மூத்த ஆசிரியர் Fariba Sahraei இது குறித்து கூறுகையில், ஈரானில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல ஈரானியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
இந்த நேரத்தில், தரானா அலிதூஸ்டியின் கைது மற்றும் அடுத்தடுத்த தண்டனை, நாட்டில் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த ஈரானிய குடிமக்கள் சமூகவலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு அரசு முயற்சி செய்வதை நிரூபிப்பதாக கூறியுள்ளார்.
Taraneh Alidoosti இந்த ஆண்டின் துவக்கத்தில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தெஹ்ரானில் அரசாங்கத்தை விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நவம்பரில் ஈரானை உலுக்கிய போராட்டங்களில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு துக்கத்தில் தனது சுயவிவரப் படத்தை கருப்பு நிறத்துடன் மாற்றியுள்ளதாக, Taraneh Alidoosti கூறியிருந்தார்.
ஈரானியர்களுக்கு விசா தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவுக்கு எதிராக Taraneh Alidoosti பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.