புலிகள் தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கி, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர கருணா அம்மானின் பங்களிப்பு பெரும் உதவியாக அமைந்தது.
கருணா புனர்வாழ்வளிக்கப்படாத போதும், யுத்தத்தை முடிக்க செய்த பங்களிப்பிற்கு நன்றிக்கடனாக அவருக்கு ஜனநாயக வழியில் செயற்பட அனுமதியளிக்கப்பட்டது என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர் தெரிவித்த விடயம் பற்றி சிஐடி விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில் ஏன் அப்படியான கருத்தை கூறினார் என்பதை ஆாய வேண்டும். இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது கருணா எமது பக்கம் வந்தார். அவர் வழங்கிய தகவலின் காரணமாக புலிகளின் முகாம்கள், களஞ்சியங்களை அழிக்க முடிந்தது.
யுத்த வெற்றிக்கு அவர் பங்களித்தார். எதிரியை எமது பக்கம் சேர்த்து சாதகமாக பயன்படுத்தினோம். கருணா பற்றி பேசுவோம், 11,600 பயங்கரவாதிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்தது பற்றி பேசுவதில்லை.
தமிழ் பெண்களிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ததாகவும், இனஅழிப்பு நடந்ததாகவும் விக்னேஸ்வரன் பேசியபோது யாரும் வாய் திறக்கவில்லை.
கருணா அம்மான் புலிகளில் இருந்து பிரிந்து அரசுக்கும், இராணுவத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார். இதன் பின்னரே அவருக்கு பொதுமன்னிப்பளிக்கப்பட்டது என்றார்.