முகக்கவசத்தை பயன்படுத்தாதவர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்த தென்னக்கோன் அறிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் நேற்று 6725 பேர் முகக் கவசத்தை பயன்படுத்தாமல் நடமாடியதால், பொலிசாரால் முதலாவது தடவை எச்சரிக்கப்பட்டு, அவரது விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல், யாராவது முகக்கவசம் அணியாமல் நடமாடினால் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார் என அறிவித்துள்ளார்.
கைகழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென பொலிசார் அறிவித்துள்ளனர்.