அமெரிக்காவில் நள்ளிரவில் சாலையில் காரில் இருந்த இளம்பெண் மீது தீ வைத்து இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட நான்கு ஆண்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Althea Bernstein (18) என்ற இளம்பெண் இரண்டு வெவ்வேறு இனத்தை சேர்ந்த தாய், தந்தைக்கு பிறந்தவர் ஆவார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் Madison நகரில் இரவு 1 மணிக்கு காரில் Althea சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிக்னலில் காரை Althea நிறுத்திய போது 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் இனவெறியை தூண்டும் வார்த்தையால் Althea-ஐ அழைத்தனர்.
பின்னர் அதில் ஒருவன் lighter fluid திரவத்தை Althea மீது தெளித்த நிலையில் இன்னொருவன் நெருப்பை அதன் மீது பற்றவைத்தான்.
இதையடுத்து தீக்காயத்தை அணைத்து கொண்ட Althea உடனடியாக தனது வீட்டுக்கு வந்த நிலையில் தனது தாயாரின் அறிவுரைப்படி மருத்துவமனைக்கு சென்றார்.
Althea முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் அவர் நலமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வெறுப்பு தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.