வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க பிக்கு ஒருவர் முன்வந்துள்ளார்.
காயமடைந்த குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க யாரும் முன்வராத நிலையில் குறித்த தேரர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தேரர் தனது பயணத்தை நிறுத்திவிட்டு காயமடைந்தவருக்கு உதவுவதற்காக முன்வந்துள்ளார்.
தேரர் தான் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
யாரும் முன்வராத நிலையில் தேரர் ஒருவரின் இந்த மனிதாபிமான செயற்பாடு பாராட்டுக்குரியதாகும்.