இன்று முதல் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டமானது முழுமையாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளத்துவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டமானது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜுன் மாதம் 13 ஆம் திகதி முதல் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















