ஒவ்வொரு நாளும் நாம் எழுந்திருக்கும்போதே அந்த நாள் நல்ல நாளாக மகிழ்ச்சியான நாளாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் எதை பார்க்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும் என்று அறியாதவர்கள் பலரும் உள்ளனர்.
காலையில் விழிப்பு தரிசனம் என்று ஒன்றுள்ளது. எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் முதலில் நாம் எதை பார்க்கின்றோமோ அதன் ஞாபகம் அந்த நாள் முழுவதும் நமக்குள் இருக்கும்.
இதற்கு அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எளிமையான ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள்.
காலையில் நாம் எழுந்திருக்கும்போதே நம் மனதில் லட்சுமி தேவியை நினைத்துக்கொண்டு நம்முடைய உள்ளங்கையை பார்க்க வேண்டும்.
ஏனெனில் நம் உள்ளங்கையில் லட்சுமி தாயார் குடியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் காலையில் எழுந்தவுடன் மங்களகரமான
- மஞ்சள்,
- குங்குமம்,
- சந்தனம்,
- இயற்கை காட்சிகள்,
- கன்றுக்குட்டி,
- பசு,
- இசைக்கருவிகள்,
- அருவி,
- கடவுளின் திருவுருவப்படங்கள்,
- விக்ரகங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.
மங்களம் நிறைந்த பொருட்களை காலையில் எழுந்தவுடன் பார்த்தோமேயானால் அந்த நாள் மகிழ்ச்சியான நாளாகவும் இனிமையான நாளாகவும் அமையும்.
கணவன் மனைவி முகத்திலும் ,மனைவி கணவன் முகத்திலும் விழிக்கலாம். குழந்தைகள் பெற்றோர் முகத்திலும் பெற்றோர் குழந்தைகள் முகத்திலும் விழிக்கலாம்.