கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி பல லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கி கொண்டிருக்கிறது.
இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 86 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தும் தற்போது இந்த வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடித்ததும் வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகிறது.
சில நாடுகளில் சில மருந்துகளை கண்டுபிடித்து அதன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கோவேக்ஸின் என்ற பெயரில் புதிய தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளது.
விலங்குகளிடம் இந்த மருந்தை வைத்து சோதனை நடத்திய போது இது நல்ல பலன் அளிப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஐ சி எம் ஆர் இந்த மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது. ஜூலை முதல் மனிதர்களுக்கிடையே பரிசோதனை நடைபெறும் என தெரிகிறது.




















