கருணா கூறியுள்ள கருத்து பயங்கரவாத தடுதப்பு சட்டத்தின் கீழ் ஆயுள்கால தண்டனையும், குற்றவியல் சட்டத்தின் கீழ் மரணதண்டனையும் வழங்கப்பட வேண்டிய குற்றமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்திளார் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் விசேட உரையாற்றியிருந்தார். இதன்போது மூன்று விடயங்களை கவனத்தில்கொள்ள வேண்டமாம் என பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதில் கருணா விடுத்துள்ள அறிவிப்பு உள்ளடங்கும். கருணா கூறியுள்ள கருத்து பயங்கரவாத தடுதப்பு சட்டத்தின் கீழ் ஆயுள்கால தண்டனையும், குற்றவியல் சட்டத்தின் கீழ் மரணதண்டனையும் வழங்கப்பட வேண்டிய குற்றமாகும்.
குற்றவாளி ஒருவர் தனே இந்த கொலைகளை செய்தேன் என வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்நிலையில், அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
எனினும், ஆயுள்கால தண்டனையும், மரணதண்டனையும் வழங்கப்பட வேண்டிய குற்றவாளியொருவரின் அறிவிப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என பிரதமர் கூறியுள்ளார்.
சட்டம் குறித்து நன்கு அறிந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை தருவதாக அஜித் பி பெரேரா மேலும் கூறியுள்ளார்.



















