2011 ஐ.சி.சி உலகக் கோப்பை இறுதி போட்டியில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ள, ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக வாக்குமூலம் வழங்க கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க அழைக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவு முன்பாக, இன்று காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2011 இல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக, முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றம்சுமத்தியிருந்தார்.
கடந்த ஜூன் 24 அன்று, சிறப்பு புலனாய்வு பிரிவு முன்பாக அவர் முன்னிலையாகி, வாக்குமூலமளித்துள்ளார். நேற்று (30) முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா முன்னிலையாகி வாக்குமூலமளித்திருந்தார்.



















