தெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் நடந்தது.
நேற்று (30) மாலை 4 மணியளவில் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றனர்.
வீட்டில் உயிராபத்தான நிலையில் தாய், மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். 35 வயதான தமிழ் தாயும், 4 வயதான மகளுமே பொலிசாரால் மீட்கப்பட்டனர்.
அவர்கள் உடனடியாக ஹெலிகொப்டர் மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 4 வயது குழந்தை உயிரிழந்தது. 35 வயதான தாயார் உயிராபத்தான நிலைமையில் உள்ளார்.
ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிசாரின் கூற்றுப்படி, இந்த சம்பவத்துடன் வெளியார் யாரும் தொடர்புபட்டிருக்கவில்லை. அதனால் யாரையும் தேடவில்லை என்றனர்.
பிரேதபரிசோதனை இன்னும் இடம்பெறவில்லை.




















