கருணாவிற்கு பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விட்டது. அவருக்கு பிரத்தியேகமாக மன்னிப்பளிக்கா விட்டாலும், முன்னாள் போராளிகளிற்கு வழங்கப்பட்ட மன்னிப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பொதுமன்னிப்பின் கீழ் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதில் சிக்கலுள்ளது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இன்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கருணா அம்மானிற்கு பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விட்டது. பிரத்தியேகமாக அவருக்கு மன்னிப்பளிக்கப்படவில்லை. ஆனால், முன்னாள் போராளிகளிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்குள் அவரும் உள்ளடங்குகிறார்.
அவர் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றார்.
இதன்போது, அரசியல் கைதிகளை ஏன் இந்த பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க முடியாது என கேள்வியெழுப்பப்பட்டது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் பாரதூரமான குற்றச்சாட்டுக்களின் கீழ் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளனர். அவர்களின் விவகாரம் சிக்கலானது என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அரசியல் கைதிகளின் பட்டியல் கையளிக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அரசியல்கைதிகளை விடுவிக்கும் எந்த நடடிக்கையும் தேர்தல் காலத்தில் இடம்பெறவில்லை என்றார்.


















