முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று பிற்பகல் சென்ற சி.ஐ.டி குழுவினர், பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றபின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு, சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு அமையவே குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.