மக்களின் ஆணை கிடைத்தவுடன் கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மீன்பிடித்துறை உள்ளிட்டவை மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. அவற்றின் நிலை கீழ் மட்டத்தில் காணப்படுகின்றது.
அதனை உயர்த்த வேண்டும் அதற்கு அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும். அதனை உரிய நடவடிக்கைகள் மேற்க்கொண்டு தீரத்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இங்கு பிரதான பிரச்சனையாக காணப்படுவுது காணி மற்றும் வீட்டுப்பிரச்சனை தான்.
எமது வேட்பாளர்களுடன் இணைந்து எமது வெற்றியுடன் மேற்படி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் இங்கு பல மாதிரி கிராமங்களை நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிறுவியுள்ளேன்.
எதிர்வரும் 5 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் மேலும் பல மாதிரி கிராமங்களை இங்கு நான் நிறுவவுள்ளேன் என்று கூறியுள்ளார்.