சின்னத்திரையில் அறிமுகமாகி அதன்மூலம் சினிமாவில் கிடைத்த படங்களில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியா தற்போது இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் படப்பிடிப்பு இல்லாமல் சமுகவலைத்தளத்தில் பொழுதினை போக்கியுள்ளார். அந்தவகையில் பழைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரியா தற்போது இரு குரங்குகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு குரங்கிற்கு லிப்லாக் முத்தம் கொடுத்தும் மற்றொரு குரங்கு கீழே நின்று கொண்டு பிரியா பவானி சங்கரை பின்னால் இருந்து பிடித்தபடியும் இருக்கிறது.
இதை பார்த்த ரசிகர்கள் குரங்கு கூடலாம் லிப்லாக் தேவையா என்றும் கேலிசெய்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.



















