சீனாவின் வட பகுதியில் உள்ள நகரங்களுக்கு இன்னொரு ஆபத்தான பெருந்தொற்று தொடர்பில் மாகாண நிர்வாகங்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெருந்தொற்று தொடர்பில் சனிக்கிழமை பயன்னூரின் உள் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள ஒரு மருத்துவமனை நிர்வாகம் முதன் முறையாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வட சீனாவின் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் அனைத்தும் மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த பெருந்தொற்றானது வனப்பகுதிகளில் கொறித்து உண்ணும் விலங்குகளில் வாழும் ஒருவகை உண்ணிகளால் பரவும் தொற்று நோய் என தெரியவந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை பலனின்றி இறக்க நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து 2020 இறுதி வரை இந்த புதிய பெருந்தொற்று தொடர்பான எச்சரிக்கை காலம் தொடரும் என்று உள்ளூர் சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்கள் சுய பாதுகாப்பு விழிப்புணர்வையும் திறனையும் மேம்படுத்த வேண்டும் எனவும், அசாதாரண சுகாதார நிலைமைகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமீபத்தில் பன்றிகளில் இருந்து உயிர் கொல்லும் பெருந்தொற்றின் வாய்ப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்,
தற்போது மூன்றாவது பெருந்தொற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சீன பொதுமக்களை மீண்டும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.