கனடாவில் இளம்பெண் ஒருவர் காணாமல்போனதாக கொடுக்கப்பட்ட புகாரையடுத்து பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளதையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 2ஆம் திகதி Saskatchewan பொலிசாருக்கு சமன்தீப் ஜிங்கர் (23) என்ற இளம்பெண் காணாமல் போனதாக புகார் வந்துள்ளது.
தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார், Warman என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சமன்தீப் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.
அது சந்தேகத்துக்கிடமான மரணம் என முடிவு செய்த பொலிசார், மூன்று பிரிவாக குற்றவாளியைத் தேடிப் புறப்பட்டனர்.
இந்நிலையில், Saskatoon பகுதியைச் சேர்ந்த ரன்பீர் துல் (42) என்ற நபர் சிக்கினார்.
நாளை சமன்தீப்பின் உடல் உடற்கூறாய்விற்கு உட்படுத்தப்பட உள்ளது. ரன்பீர் ஏற்கனவே சமன்தீப்புக்கு அறிமுகமானாவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இருவருக்கும் என்ன உறவு என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ரன்பீர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.