ஒவ்வொரு வீட்டிலும் பூஜை செய்து வணங்குவது அவசியமான ஒன்று.
பூஜை அறையில் குல தெய்வங்களையும், இஷ்ட தேவதைகளையும் வணங்கினால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
பூஜை செய்யும்போது நெய் வேதியம் என்று நாம் சமைக்கும் ஏதாவது ஒன்றை வைத்து படைக்கவேண்டும். அப்படி முடியாதவர்கள் கற்கண்டு, உலர் திராட்சை,பேரீட்சைப்பழம் வைத்து நெய் வேதியம் செய்யலாம்.
நெய் வேதியத்துடன் பஞ்சபாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து உங்களின் வேண்டுதல்களை வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் பஞ்சபாத்திரத்தின் நீரில் இறங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பூஜையை முடித்தபின் அந்த பஞ்சபாத்திரத்தில் உள்ள புனிதமிக்க தண்ணீரை வீட்டில் உள்ள அனைவரும் தீர்த்தமாக பருகினால் மிகவும் நல்லது. நம்மில் நிறைய பேர் அந்த நீரை துளசி மாடத்திற்கும்,செடிகளிலும் ஊற்றிவிடுவார்கள்.
ஆனால் அந்த நீரை தீர்த்தமாக பருகும்போது நீங்கள் வேண்டிக்கொண்ட வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயம் நடக்கும்.சுபகாரியங்களுக்காக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பூஜை அறையில் உள்ள இந்த நீரை குடித்துவிட்டு சென்றால் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.