தென் சீன கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்த சீனா தொடர்ந்து முயன்று வருவதால் அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகிறது.
இந்நிலையில் அக்கடற்பரப்பில் அமைந்துள்ள பரசல் தீவுகளில் போர் பயிற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
இதற்கு அண்டை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்காவும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.இந்நிலையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு தொடர்பாக அமெரிக்க இராணுவம் இந்தியாவுடன் வலுவாக துணை நிற்கும் என்று வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில்,
ஆசியாவில் இருந்தாலும் சரி அல்லது ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்தாலும் சரி. எந்த நாடும் தங்களை சக்தி வாய்ந்தவராக வெளிப்படுத்த மற்ற நாடுகளை அடக்கி,
தங்களின் ஆதிக்கத்தை செலுத்தினால் அது சீனாவாக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும்சரி அதற்கு நாங்கள் துணை நிற்கமாட்டோம்.
எங்களது நட்பு நாடுகளுக்கு என்றுமே துணை நிற்கும், தொடர்ந்து வலுவாக துணை நிற்போம்.
சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது, அதில் தவறேதுமில்லை.
எங்களின் இரு விமானம் தாங்கி கப்பல்களான ரொனால்ட் ரீகன், நிமிட்ஸ் ஆகியவற்றை தென் சீனக் கடலுக்கு அனுப்பியுள்ளோம்.
தென் சீனக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிவோம். மிகப்பெரிய ராணுவப்படை, வலிமையான சக்தி எங்களிடம் இருக்கிறது என்பதை உலகம் அறியவே அந்த படைகளை நாங்கள் அனுப்பியுள்ளோம்.
ராணுவத்தின் வளர்ச்சிக்காக ஆயுதங்கள் மட்டுமின்றி ஆண்கள், பெண்களை படைக்கு சேர்த்ததில் டிரம்பின் பங்கு முக்கியம் என தெரிவித்துள்ளார்
தென் சீன கடற்பகுதியில் விமானம் தாங்கி கப்பலை அனுப்பிய பின்னர் இந்த அறிக்கை வெளியாவது குறிப்பிடத்தக்கது.