உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை (8) வடக்கின் சில இடங்களில் மின் தடைப்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி நாளை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை,
யாழ் பிரதேசத்தில்- மிருசுவில், மருதங்குளம், எழுதுமட்டுவாள் பிரதேசம், மிருசுவில் படித்த மகளிர் குடியிருப்பு திட்டம் ஆகிய பகுதிகளிலும்,
வவுனியா மாவட்டத்தில்- சமணன் குளம், கிறிஸ்தவகுளம் ஆகிய பகுதிகளிலும்,
மன்னார் மாவட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை- கொக்குபடையான், கொண்டச்சி கிராமம், மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம், கரடிக்குழி, பாலக்குழி, முள்ளிக்குளம் கடற்படை முகாம், சிறுநாவற்குளத்திலிருந்து தலைமன்னார் வரை, தலைமன்னார் கடற்படை முகாம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்படும்.