பிரான்சில் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது ரோலர் கோஸ்டரில் சென்ற ஒரு பெண் தவறி விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Elodie Duval (32), கடந்த சனிக்கிழமையன்று தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தீம் பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவர் ரோலர் கோஸ்டரிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
அவரது கணவர் அவரது காலைப் பிடிக்க முயன்றும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என சம்பவத்தைக் கண்ணால் பார்த்தவர்கள் தெரிவித்டுள்ளார்கள்.
தீயணைப்பு வீரர்களும் தங்களாலானமட்டும் அவரைக் காப்பாற்ற முயன்றும், எந்த முயற்சிகளும் பலனளிக்காமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் Elodie.
பிறந்தநாள் கொண்டாட்ட குழந்தையான Allen, அம்மா எங்கே என்று கேட்க, அம்மா சொர்க்கத்துக்கு போய்விட்டார்கள் என்று கூறியும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லையாம்.
Elodie ரோலர் கோஸ்டரிலிருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம், அங்கு வந்திருந்த பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.