மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் மாவனல்லை ஹெம்மாதகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபர் இன்றைய தினம் விலங்குகளை வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்கம்பியில் உள்ள மின்சாரம் தாக்கி இவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 60 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மின் கம்பிகளை காட்டில் பொருத்திய நபர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.